எது வாழ்க்கை
பெண்களே PHD பண்றீங்களோ இல்லையோ பட்டப்படிப்பு படிக்கிறீங்களோ இல்லையோ இத படிங்க முதல்ல வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்... எங்கள் தோழி... 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்.. பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்... எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை, எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்... ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று.. அதில் தொனித்த வேதனையை எங்களால் இனம் காண முடிந்...