Posts

Showing posts with the label பிறர்

இந்த மாதிரி மக்களுக்கு

 9665737555 ஒரு போலிஸ் நண்பரின் பதிவு…‌ 💜 இரவு 10.15 மணிக்கு பணி முடித்து வீட்டிற்க்கு செல்லும்போது நல்ல மழை ...இராஐகுளம் அருகில் எனக்கு முன்னால் TVS 50 ல் சென்ற ஒரு பெண்மணியை ஓவர்டேக் செய்து சென்று விட்டேன். ஆனால் அவர்கள் பாவம் ...முழுமையாக மழையில் நனைந்து விட்டார்கள்..பின்பக்கம் உடை முழுவதுமாக காற்றில் பறக்கிறது..அவர் உடலை மூடவில்லை...சொல்லலாம் என யோசித்தேன்..அவங்க எப்படி எடுத்துக்குவாங்களோனு யோசிச்சு கடந்து வந்திட்டேன்.. 0 இராஜகுளம் கட்டிங்கல திரும்பி வந்துகொண்டிருக்கும்போது எனது வண்டியை பின்தொடர்ந்து ஒரு வண்டி வந்துகொண்டிருப்பதை எனது ரியர்வியூ மிரர் மூலமாக பார்த்தேன் . இது வழக்கமான ஒன்றுதான்.ஏனென்றால் கிட்டத்தட்ட 3.5 கிமீ ஆளரமில்லாத இரண்டு பக்கமும் ஏரிகளுக்கு நடுவில்தான் அந்த பாதையே இருக்கும். அதனால் பல பேர் தனியா வர பயந்து ஏதோ ஒரு வண்டி வந்தா அதுகூடவே வருவாங்க.எனக்கு இது பலமுறை அனுபவம்... அந்த ரோடில் எப்பவும் டிராபிக் இல்லாததால நான் வண்டியை வேகமாக ஓட்டுவேன்..நடுவில ஒரு பள்ளம் இருக்கும்..வழக்கம்போல அங்க பிரேக் அடிக்கும்போது சார்..சார் என ஒரு பெண் குரல் .....திரும்பி பார்த்தா ஏ...

பொண்டாட்டி மேல் அவ்வளவு பாசமா

 இரண்டு திருடர்கள் பகலில் ஒரு வீட்டில் திருட சென்றார்கள்! அந்த வீட்டில் இருந்த பெண்ணை கட்டி போட்டு விட்டு! வீட்டில் இருக்கும் பணம் நகை எல்லாம் எங்கே இருக்கு என்று கேட்டு மிரட்டி கொண்டு இருந்தார்கள்! அப்போது பாத்ரூம்ல குளித்து கொண்டு இருந்த ஆண் வெளியே வந்து திருடர்களை பார்த்து பயந்து! எப்பா! வீட்டில் இருக்கும் எல்லா நகை, பணத்தையும் கொடுத்து விடுகிறேன்! முதல்ல கட்டி போட்டு இருக்கும் பெண்ணை அவிழ்த்து விடுங்கள் என்று கெஞ்சினான்! அதில் ஒரு திருடன்! என்னப்பா உன் பெண்டாட்டி மேல் அவ்வளவு பாசமா! என்று கேட்க ! அதற்கு அந்த ஆள் ! ஆமா சார் ரொம்ப பாசம் கூடவே என் உயிர் மேல் பயம்! கடைக்கு போய் இருக்கும் என் மனைவி எப்ப வேண்டும் என்றாலும் திரும்பி வந்துடுவாங்க அதான் அவர்களை முதலில் அவிழ்த்து விடுங்க ! அவங்க போகட்டும் என்றானாம்!

காரில் போனார்கள்

ஒரு காரில், தாய், மனைவியுடன், ஒருவன் பயணம் செய்து கொண்டு இருந்தான். பின்னாடியே ஒரு போலீஸ் ஜீப் அந்த காரை பின் தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில், போலீஸ் ஜீப், காரை முந்தி மறிப்பது போல் நின்றது. அதில் இருந்து இறங்கிய, போக்குவரத்து துறை உயர் அதிகாரி, காரில் இருந்து, அந்த மனிதனை இறங்குமாறு பணித்தார். அவனும் இறங்கி வரவே, வாழ்த்துக்கள் sir! நானும் உங்கள் வண்டியை, விடாமல் அரை மணி நேரமாக ஃபாலோ செய்கிறேன். நிதானமாக, போக்கு வரத்து விதிகளை மீறாமல், கவனமாக வண்டி ஓ ட்டினீர்கள்! அதை பாராட்டி, உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் க்கான செக் ! என்று எடுத்து நீட்டினார் காரை ஒட்டியவர் குஷியாகி, சொந்த கார் வாங்க வேண்டும்! என்ற என் கனவு நினைவாக போகிறது என்றான். உடனே அவன் மனைவி, அது மப்புல கண்டபடி உளறும் ! நீங்க கண்டுக்காதீங்க என்றாள். காது கேட்காத அவன் தாய், அடுத்தவங்க வண்டிய திருடாதேன்னு அப்பவே சொன்னேன். கேட்டியா? இப்ப பாரு போலீஸ் கிட்ட மாட்டிகிட்ட ! என்றாள்.

இதுக்குதான் ஃபோன்

  அலுவலகத்தில் இருக்கும் கணவனுக்கு மெஸேஜ் அனுப்பினார் அவர் மனைவி மனைவி : என்னங்க , வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வாங்க, அப்படியே சுகன்யா உங்களுக்கு ஹாய் சொல்ல சொல்றா... ( இது மனைவியின் மெசேஜ்) கணவன் : யாரு சுகன்யா , எனக்கு ஹாய் சொல்ல சொல்றது.. மனைவி : அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீங்க மெஸேஜ் படிச்சிட்டீங்களான்னு கன்பார்ம் பண்றதுக்காகத்தான் அப்படி நான் போட்டு அனுப்பிச்சேன்... இதுக்கு மேல தான் ட்விஸ்ட்டே... கணவன் : இல்ல, நான் இங்க சுகன்யா கூடத்தான் இருக்கேன் , நீ எந்த சுகன்யாவை சொல்றேன்னு தெரியல , அதான் கேட்டேன்... மனைவி : இப்போ நீங்க எங்க இருக்கீங்க??? கணவன் : காய் கறி கடையில... மனைவி : அங்கேயே இருங்க 10 நிமிஷத்துல வர்றேன்... கணவன் : சரி சீக்கிரம் வா... 10 நிமிஷத்துல வர்றேன்னு சொன்ன மனைவி 5 நிமிஷத்துல காய்கறி கடைகிட்ட வந்து திரும்பி கணவனுக்கு கால் பண்றாங்க... மனைவி : எங்க இருக்கீங்க?? கணவன் : நீ எங்க இருக்க?? மனைவி : காய்கறி கடையில... நீங்களும் அவளும் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க மொதல்ல... கணவன் : நான் இன்னமும் ஆபீஸ் ல தான் இருக்கேன் செல்லம்.. நீதான் காய்கறி கடைக்கு ...

விட்டுக் கொடுக்க முடியுமா

  வீட்டிலேயே தனிமை *பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!* *வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...* *இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...* *இங்குதான் என் மகள் படிப்பாள்...* *இங்குதான் விளையாடுவாள்...* *என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...* *என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....* *என்ன சமைப்பது?...* *என்ன சாப்பிடுவது?...* *அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..* *பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...* *தனிமை... வெறுமை...* *அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...* *பயணம் ஒரு கொடுமை...* *லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...* *சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...* *ஓலாவும், ஊபரும்...* நமக்கு தேவைப்படும் நேரத்தில், *பீக் hour சார்ஜ்* போட்டு களைப்படைய செய்கின்றனர்... *நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....* இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்...

மனைவியின் பிரசவ வலி

 ஐடா கதவை திறக்கிறார் 1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!! அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..! ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..! ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார். "இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... ...

காடு, தோட்டம் இருக்குற மாப்ள வேணும்

 பொண்ணுக்கு டீ, காப்பி போடத் தெரியுமா..? ~ தெரியாதுங்க.. * உங்க பொண்ணுக்கு மாடு மேய்க்கத் தெரியுமா..? ~ தெரியாதுங்க.. *காட்டுல களை எடுக்கவாவது உங்க பொண்ணுக்கு தெரியுமா..? ~ தெரியாதுங்க.. * நடவு நடத்தெரியுமா உங்க பொண்ணுக்கு..? ~ அதெல்லாம் தெரியாதுங்க.. * மாட்டைப் பிடிச்சு கட்டத் தெரியுமா..? ~ தெ..தெரியாதுங்க.. * தக்காளிச் செடியையாவது கட்டத் தெரியுமா..? ~ அதுவும் தெரியாதுங்க.. * சரி, பரவால்ல. உங்க பொண்ணுக்கு விவசாயம் பண்ற மாப்பிள்ளைய புடிக்குமா..? ~ சே..சே.. சுத்தமா புடிக்காதுங்க.. * அப்புறம், என்ன வெங்காயத்துக்கு காடு, தோட்டம் இருக்குற மாப்ள வேணும்னு கேட்கறிங்க..???😣 நாட்டில் நடக்குற உண்மை சம்பவம்.... படித்ததில் பகிர்ந்து கொண்டேன்🤝🤷‍♂️ இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்.... முப்பது வயசுல இது வேணும்னு தோணும்.... நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்.... ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட பரவாயில்லைனு தோணும்..... அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்.... எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!! காலமாற்றம்.... காலச்சுழற்சி... கால நேரம்....!!!!! பிடிவாதம் எல்லாம் முடக...

எது வாழ்க்கை

 பெண்களே PHD பண்றீங்களோ இல்லையோ பட்டப்படிப்பு படிக்கிறீங்களோ இல்லையோ இத படிங்க முதல்ல வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்... எங்கள் தோழி... 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்.. பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்... எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை, எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்... ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று.. அதில் தொனித்த வேதனையை எங்களால் இனம் காண முடிந்...

எதிர்பார்ப்பு இல்லாமல்

 பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி சம்பந்தமாக, மணிவண்ணன் அவர்களை ஓரிருமுறை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கிறேன். அது அவர் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்த நேரம். ஆனாலும் எந்தவிதமான பந்தாவும் இன்றி பண்போடும் பக்குவத்தோடும் பரிவோடும் வரவேற்று உபசரித்தார். அப்போதே மணிவண்ணன் மீது எனக்கு பிரமிப்பு கலந்த ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. அந்த மரியாதை இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. அதற்கு காரணம், சமீபத்தில் நான் பார்த்த ஒரு வீடியோ. மணிவண்ணன் சம்பந்தமான ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் அகத்தியன் பேசியது. அதன் சாராம்சம், இதோ: அகத்தியன் சினிமாவில் புகழ் பெறுவதற்கு முன், அவர் எழுதிய ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை இயக்குவது சம்பந்தமாக மணிவண்ணனை நேரில் போய் சந்தித்திருக்கிறார். ஒரு சில தொடர் சந்திப்புகளுக்கு பின் ஒரு சிறிய இடைவெளி. அந்த நேரத்தில் ஊரிலிருந்த அகத்தியனின் தந்தை காலமாகி விட்டார். ஊருக்கு போக அகத்தியன் கையில் காசு இல்லை. தெரிந்த நண்பர்களிடம் 100, 200 என கடன் வாங்கி, இறுதிச் சடங்குக்கு போய்விட்டு, மீண்டும் சென்னைக்கு வந்த அகத்தியனுக்கு ...

பாவம் அவர்

டிரெயின் கிளம்பியது அவசரம் அவசரமாக ஒருவன் ஏறி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து சற்று மூச்சி வாங்கினான். சற்று நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் ( TTR) வந்து டிக்கெட்டை கேட்டார்! அவன் வாங்கி வைத்திருந்த டிக்கெட்டை கொடுத்தான்! TTR பயணியை பார்த்து ஐயா இது பாசஞ்சர் ரயில் டிக்கெட் என்று சொல்ல! அவரோ நான் பாசஞ்சர் தானே! என்று சொல்ல! அதற்கு அவர் இல்லங்க ஐயா ! இது எக்ஸ்பிரஸ் டிரெயின்! நீங்கள் பாசெஞ்சர் ரயில் டிக்கெட் வாங்கி இருப்பதால் இதில் நீங்கள் பயணிக்க முடியாது என்று சொல்ல! அதற்கு அவர் சரி பாசெஞ்சர் ரயிலுக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்க! பாசஞ்சர் ரயில் மெதுவாக செல்லும் எல்லா ஊரிலும் நின்று செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக செல்லும் குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் தான் நிக்கும்! அதனால் நீங்கள் அடுத்த ஊரில் ரயில் நிக்கும்போது நீங்கள் அங்கே இறங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல! அதற்கு பயணி TTR ஐ பார்த்து ஒன்னு பண்ணுங்க நான் டிக்கெட் எடுத்து விட்டேன் நீங்க என்ன பண்ணுங்க ரயிலை மெதுவா போக சொல்லுங்க எனக்கு ஒன்னும் வேகமா ஊருக்கு போய் ஒன்னும் அங்க ஒன்னும் வேலை இல்லை! என்று சொல்ல! அதற்...

இளமையாக்கும் மாத்திரை

ஒரு விஞ்ஞானி ஒரு மாத்திரை கண்டு பிடித்தார். அதில் ஒரு மாத்திரையை சாப்பிட்டால் ஐந்து வயது குறையும். விஞ்ஞானி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு 60 வயது பாட்டி அந்த மாத்திரை இருந்த பாட்டிலை விஞ்ஞானிக்கு தெரியாமல் எடுத்து போய் விட்டது. மறுநாள் விஞ்ஞானி தன் கண்டுபிடித்த மாத்திரையை காணவில்லை என்று தேடி கொண்டு இருந்தார். சரி வேலை செய்யும் பாட்டி வந்தால் கேட்கலாம் என்று காத்து இருந்தார். அப்பொழுது 30 வயது மிக்க ஒரு அழகிய பெண் கையில் ஒரு குழந்தையுடன் வந்தார். விஞ்ஞானி அந்த பெண்ணை பார்த்து யாரம்மா நீ உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஐயா நான் தான் உங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பாட்டி, உங்களுக்கு தெரியாமல் நீங்கள் கண்டு பிடித்த மாத்திரை எடுத்து போய் அதில் 6 மாத்திரை சாப்பிட்டு விட்டேன் அதான் 30 வயது பெண்ணாகி விட்டேன். விஞ்ஞானி சொன்னார் சரிம்மா அது நல்ல விசயம் தானே அதற்கு ஏன் இவ்வளவு வருத்தபடுகிறாய். சார்! இந்த விசயத்தை என் 62 வயது வீட்டுக்காரருக்கு சொன்னேன். அவர் என்னை நம்பாமல் 12 மாத்திரை எடுத்து சாப்பிட்டு விட்டார். என் கையில் விரல் சூப்பி கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை அ...

நினைவுபடுத்துங்க

 மாலை அந்தி சாய்ந்த நேரம்! விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு அரசு பேருந்து புறப்பட்டது! ஒரு வயதான மூதாட்டி ஏறினார்! ஓட்டுநர் கிட்ட சென்று ஐயா மறக்காம கண்டமங்கலம் வந்தா சொல்லுங்க ! மறந்துடாதீங்க! கண்டிப்பா சொல்லுங்க என்று பாட்டி கெஞ்ச! ஓட்டுநர் ! கண்டிப்பா சொல்றேன் அம்மா! எதற்கும் என் கண் பார்வை படும் இடத்தில் உட்காரு என்று சொன்னார். பேருந்து புறப்பட்டது! ஓட்டுநர் நடத்துநரிடம் பேசி கொண்டே கண்டமங்கலம் தாண்டி இரண்டு கிலோமீட்டர் வந்துவிட்டார்! திடீர் என்று நடத்துநர் பாட்டியின் வேண்டுகோளை நினைவு படுத்த பதறி போய் உடனே பேருந்தை U டர்ன் எடுத்து கண்டமங்கலம் வந்து சேர்ந்து, நிம்மதியாக அந்த பாட்டியை பார்த்து அம்மா! கண்டமனூர் வந்து விட்டது என்று அவரை எழுப்ப! பாட்டி ஓட்டுனருக்கு நன்றியை தெரிவித்து சுருக்கு பையில் இருந்து மாத்திரை ஒன்றை எடுத்து போட்டு கொண்டார்! ஓட்டுநர் திகைத்து போய் என்ன அம்மா செய்கிறாய் என்று கேட்க! அதற்கு அந்த பாட்டி என் பேத்தி தான் சொல்லுச்சு ஆயா மறக்காம கண்டமங்கலம் வந்த வுடன் பிளட் பிரஸர் மாத்திரை போட்டு கொள் என்று சொல்லுச்சு! என்று சொன்னார்! இப்ப ஓட்டுனருக்கு பிரசர்...