என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்
அனபாயன் சோழன் ஆட்சிக் காலம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு உழவன். சிவனடியார் அவனிடம் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான்.
0
சிவன் தன் அடியவர்களைச் சோதனை செய்வது வழக்கம். சிவனடியார் கோலத்தில் இந்த உழவர் இல்லத்துக்கு வந்தார்.
0
"எதைக் கேட்டாலும் கொடுக்கிறீர் என்று அறிந்து என் ஆசையைத் தீர்த்துக்கொள்ள உன்னிடம் வந்தேன்"
"கேளுங்கள் சாமி"
"என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்"
"என்னிடம் இருப்பதைக் கேட்டீர்கள். தருகிறேன் சாமி"
0
உழவர் தன் மனைவியை அழைத்தார். அவள் கணவன் சொல்லைத் தட்டாதவன்.
"இன்று உன்னை இவருக்குக் கொடுத்துவிட்டடேன்"
மனைவி வியந்தாள். தயங்கினாள். கணவனை வணங்கினாள். பின் அடியாரை வணங்கினாள்.
"இந்த ஊரைத் தாண்டி நாங்கள் செல்லும் வரையில் எங்களுக்குத் துணையாக நீ வரவேண்டும்"
"ஆகட்டும் சாமி"
0
உழவர் அவர்களுக்குப் பாதுகாப்பாக அவர்களின் பின்னே சென்றார்.
செய்தி உற்றார் உறவினர்களுக்கும் ஊருக்கும் தெரிந்துவிட்டது.
அனைவரும் திரண்டு வந்தனர். உழவருக்கு அறிவுரை கூறித் தடுத்தனர். உழவர் கேட்கவில்லை. உழவனை அடித்தனர். பொறுத்துக்கொண்டான். வாளை உருவிக்கொண்டு உழவனைக் கொல்லவந்தனர்.
0
உழவன் தன் வாளை உருவினான். உறவினர்களையும், ஊராரையும் வெட்டி வீழ்த்தினான். ஊரே பிணமாயிற்று.
0
"இவளுடன் செல்லுங்கள் சாமி"
சாமியைக் காணவில்லை.
பிணங்களைக் காணவில்லை
எல்லாரும் மனைவியும் உழவன் காலடியில் விழுந்து வணங்கினர்.
இந்த உழவர்தான் இயற்பகை நாயனார்
Comments
Post a Comment