நினைவுபடுத்துங்க
மாலை அந்தி சாய்ந்த நேரம்!
விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு அரசு பேருந்து புறப்பட்டது!
ஒரு வயதான மூதாட்டி ஏறினார்! ஓட்டுநர் கிட்ட சென்று ஐயா மறக்காம கண்டமங்கலம் வந்தா சொல்லுங்க ! மறந்துடாதீங்க!
கண்டிப்பா சொல்லுங்க என்று பாட்டி கெஞ்ச!
ஓட்டுநர் ! கண்டிப்பா சொல்றேன் அம்மா! எதற்கும் என் கண் பார்வை படும் இடத்தில் உட்காரு என்று சொன்னார்.
பேருந்து புறப்பட்டது! ஓட்டுநர் நடத்துநரிடம் பேசி கொண்டே கண்டமங்கலம் தாண்டி இரண்டு கிலோமீட்டர் வந்துவிட்டார்!
திடீர் என்று நடத்துநர் பாட்டியின் வேண்டுகோளை நினைவு படுத்த பதறி போய் உடனே பேருந்தை U டர்ன் எடுத்து கண்டமங்கலம் வந்து சேர்ந்து, நிம்மதியாக அந்த பாட்டியை பார்த்து அம்மா! கண்டமனூர் வந்து விட்டது என்று அவரை எழுப்ப!
பாட்டி ஓட்டுனருக்கு நன்றியை தெரிவித்து சுருக்கு பையில் இருந்து மாத்திரை ஒன்றை எடுத்து போட்டு கொண்டார்!
ஓட்டுநர் திகைத்து போய் என்ன அம்மா செய்கிறாய் என்று கேட்க!
அதற்கு அந்த பாட்டி என் பேத்தி தான் சொல்லுச்சு ஆயா மறக்காம கண்டமங்கலம் வந்த வுடன் பிளட் பிரஸர் மாத்திரை போட்டு கொள் என்று சொல்லுச்சு! என்று சொன்னார்!
இப்ப ஓட்டுனருக்கு பிரசர் ஏறியது! பாட்டியை பார்த்து என்னம்மா கண்டமங்கலம் தான் மாத்திரை போடனுமா! கண்ட ஊரில் போட கூடாதா என்று கோபத்தின் உட்ச்சிக்கே போனார்!
Comments
Post a Comment