இளமையாக்கும் மாத்திரை
ஒரு விஞ்ஞானி ஒரு மாத்திரை கண்டு பிடித்தார். அதில் ஒரு மாத்திரையை சாப்பிட்டால் ஐந்து வயது குறையும்.
விஞ்ஞானி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு 60 வயது பாட்டி அந்த மாத்திரை இருந்த பாட்டிலை விஞ்ஞானிக்கு தெரியாமல் எடுத்து போய் விட்டது.
மறுநாள் விஞ்ஞானி தன் கண்டுபிடித்த மாத்திரையை காணவில்லை என்று தேடி கொண்டு இருந்தார். சரி வேலை செய்யும் பாட்டி வந்தால் கேட்கலாம் என்று காத்து இருந்தார்.
அப்பொழுது 30 வயது மிக்க ஒரு அழகிய பெண் கையில் ஒரு குழந்தையுடன் வந்தார்.
விஞ்ஞானி அந்த பெண்ணை பார்த்து யாரம்மா நீ உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஐயா நான் தான் உங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பாட்டி, உங்களுக்கு தெரியாமல் நீங்கள் கண்டு பிடித்த மாத்திரை எடுத்து போய் அதில் 6 மாத்திரை சாப்பிட்டு விட்டேன் அதான் 30 வயது பெண்ணாகி விட்டேன்.
விஞ்ஞானி சொன்னார் சரிம்மா அது நல்ல விசயம் தானே அதற்கு ஏன் இவ்வளவு வருத்தபடுகிறாய்.
சார்! இந்த விசயத்தை என் 62 வயது வீட்டுக்காரருக்கு சொன்னேன். அவர் என்னை நம்பாமல் 12 மாத்திரை எடுத்து சாப்பிட்டு விட்டார். என் கையில் விரல் சூப்பி கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை அவர்தான்.
சாமி எப்படியாவது மாற்று மருந்து கொடுத்து அவரை ஒரு முப்பது வயது ஆளாக மாற்றிவிடுங்கள் என்று கெஞ்சியதாம்.
Comments
Post a Comment