தலைகீழாகத் தொங்கினாள்
குழந்தை பிறக்கும் நேரம் வந்தது.
தாய் சோழநாட்டு அரசி. பெயர் கமலவதி.
நேரம் கணித்துச் சொல்லும் சோதிடன் ஒருவன் வந்தான்.
குழந்தை ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் மூவுலகையும் ஆளும் பேறு பெறுவான் என்று கூறினான்.
என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுங்கள். ஒரு நாழிகை கழித்துப் பெற்றுக்கொள்கிறேன் - என்றாள்.
தந்தை சோழ அரசன். பெயர் சுபதேவன். உறையூரில் இருந்துகொண்டு நாட்டை ஆண்டுவந்தான்.
அரசியின் விருப்பத்தை நிறைவேற்றினான்.
ஒரு நாளிகை நேரம் கழிந்தது. கணியன் நேரம் பற்றிச் சொன்னான். தாய் தன்னை இறக்கி விடுமாறு கூறினாள். குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
குழந்தையைச் "கோச்செங்கண்ணனோ" என்று அழைத்தாள். இறந்துவிட்டாள்.
தந்தை குந்தையை வளர்த்தான்.
அரசன் ஆக்கினான்
அரசன் செங்கணான் சிவனுக்குக் கோயில்கள் பல கட்டினான்.
இவன் முன் பிறவியில் திருவானைக்கா சிவன் இருந்த நாவல் மரத்தடியில் சிலந்திப் பூச்சியாக இருந்து சிலந்தி வலையால் அந்தச் சிவனுக்குக் கோயில் கட்டியவன்.
Comments
Post a Comment