இந்த மாதிரி மக்களுக்கு

 9665737555

ஒரு போலிஸ் நண்பரின் பதிவு…‌


💜 இரவு 10.15 மணிக்கு பணி முடித்து வீட்டிற்க்கு செல்லும்போது நல்ல மழை ...இராஐகுளம் அருகில் எனக்கு முன்னால் TVS 50 ல் சென்ற ஒரு பெண்மணியை ஓவர்டேக் செய்து சென்று விட்டேன்.

ஆனால் அவர்கள் பாவம் ...முழுமையாக மழையில் நனைந்து விட்டார்கள்..பின்பக்கம் உடை முழுவதுமாக காற்றில் பறக்கிறது..அவர் உடலை மூடவில்லை...சொல்லலாம் என யோசித்தேன்..அவங்க எப்படி எடுத்துக்குவாங்களோனு யோசிச்சு கடந்து வந்திட்டேன்..

0

இராஜகுளம் கட்டிங்கல திரும்பி வந்துகொண்டிருக்கும்போது எனது வண்டியை பின்தொடர்ந்து ஒரு வண்டி வந்துகொண்டிருப்பதை எனது ரியர்வியூ மிரர் மூலமாக பார்த்தேன் .

இது வழக்கமான ஒன்றுதான்.ஏனென்றால் கிட்டத்தட்ட 3.5 கிமீ ஆளரமில்லாத இரண்டு பக்கமும் ஏரிகளுக்கு நடுவில்தான் அந்த பாதையே இருக்கும்.

அதனால் பல பேர் தனியா வர பயந்து ஏதோ ஒரு வண்டி வந்தா அதுகூடவே வருவாங்க.எனக்கு இது பலமுறை அனுபவம்... அந்த ரோடில் எப்பவும் டிராபிக் இல்லாததால நான் வண்டியை வேகமாக ஓட்டுவேன்..நடுவில ஒரு பள்ளம் இருக்கும்..வழக்கம்போல அங்க பிரேக் அடிக்கும்போது சார்..சார் என ஒரு பெண் குரல் .....திரும்பி பார்த்தா ஏற்கனவே பார்த்த அந்த பெண்மணி.

என்னம்மானு கேட்டா குன்றத்தூரில் வசிக்கும் உடல்நிலை சரியில்லாத தன் மகளை பார்க்க சென்றதாகவும்..இப்போது மழை வந்ததால காத்திருந்து வந்ததாகவும் சொன்னார்..மேலும் NH ல் சென்றால் 10 கி மீ கூடுதல் தூரமாவதோடு பயமாகவும் இருப்பதாகவும் உங்க வண்டில போலீஸ்னு போட்டிருக்கிறதை பார்த்தவுடன் உங்களை பின்தொடர்கிறேன்..ஆனா உங்க வேகத்துக்கு என்னால் ஓட்ட முடியலை கொஞ்சம் மெதுவா போங்க சார் என்று தெரிவித்தார்.

0

அவருக்காக மெதுவாக வாகனத்தை ஓட்டி வந்தேன்.அவரும் என்மேல் கொண்ட நம்பிக்கையால் எனக்கு இணையாகவே ஓட்டிகொண்டு வந்தார்.. வந்தவர் திடீரென முழுவதும் இருளான ஒரு கட்டிங்கில் சார் நான் இப்படியே சென்றுவிடுகிறேன் என்று சொன்னார்..

இங்கபோகாதீங்க மெயின் ரோடில் போகலாம் என்று சொன்ன போது அவங்க சொன்ன பதில் என்னை அப்படியே சாகடிச்சு போட்டுவிட்டது... பதில் இதுதான்... மழைல டிரஸ் மொத்தம் நனைச்சிருச்சு சார் டவுனுக்குள்ள போனா வேடிக்கை பார்ப்பாங்க சார் அதனால் யாருமிலலா இந்த வழியிலேயே போயிடுறேன்னு சொன்னாங்க..

0

நம்ம மண்ணோட பெண்கள் நிலைமையை நினைச்சு வேதனைபட்டு இந்த சமுதாயத்தை நினைத்து வெட்கப்பட்டு அவருக்கு தைரியம் கூறி மெதுவாக நகரத்திற்குள் பத்திரமாக அழைத்து வந்து விடைகொடுத்தேன்.விசாரிக்கும் போது பேருந்து நிலையம் அருகிலுள்ள பிரபல மருந்து கடையி்ல் வேலை செய்வதாக தெரிவித்தார்.

மிகவும் நன்றி சார் என கூறிவிட்டுதான் சென்றார்..

யாரோ சில பேர் செய்த செயலுக்கு ஒட்டு மொத்த காவல்துறையை எல்லாரும் திட்டிகிட்டு இருக்கும்போது வண்டில போலீஸ்னு எழுதியிருந்த ஒற்றை வார்த்தையை நம்பி பின்தொடரும் இந்த மாதிரி மக்களுக்கு போலீஸ்னா நமக்கு பாதுகாப்புனு இப்பவும் நினைக்கிற நல்ல உள்ளங்களுக்காக இன்னும் எவ்வளவு தூற்றுதல்கள் தாக்குதல்கள் வந்தாலும் எங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்....!

Comments

Popular posts from this blog

ஆறாமலேயே ஆறிவிட்டது

என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்