காரில் போனார்கள்

ஒரு காரில், தாய், மனைவியுடன், ஒருவன் பயணம் செய்து கொண்டு இருந்தான். பின்னாடியே ஒரு போலீஸ் ஜீப் அந்த காரை பின் தொடர்ந்து வந்தது.

ஒரு கட்டத்தில், போலீஸ் ஜீப், காரை முந்தி மறிப்பது போல் நின்றது. அதில் இருந்து இறங்கிய, போக்குவரத்து துறை உயர் அதிகாரி, காரில் இருந்து, அந்த மனிதனை இறங்குமாறு பணித்தார். அவனும் இறங்கி வரவே, வாழ்த்துக்கள் sir! நானும் உங்கள் வண்டியை, விடாமல் அரை மணி நேரமாக ஃபாலோ செய்கிறேன். நிதானமாக, போக்கு வரத்து விதிகளை மீறாமல், கவனமாக வண்டி ஓ ட்டினீர்கள்! அதை பாராட்டி, உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் க்கான செக் ! என்று எடுத்து நீட்டினார்

காரை ஒட்டியவர் குஷியாகி, சொந்த கார் வாங்க வேண்டும்! என்ற என் கனவு நினைவாக போகிறது என்றான்.

உடனே அவன் மனைவி, அது மப்புல கண்டபடி உளறும் ! நீங்க கண்டுக்காதீங்க என்றாள்.

காது கேட்காத அவன் தாய், அடுத்தவங்க வண்டிய திருடாதேன்னு அப்பவே சொன்னேன். கேட்டியா? இப்ப பாரு போலீஸ் கிட்ட மாட்டிகிட்ட ! என்றாள்.


Comments

Popular posts from this blog

ஆறாமலேயே ஆறிவிட்டது

என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்

இந்த மாதிரி மக்களுக்கு