பொண்டாட்டி மேல் அவ்வளவு பாசமா
இரண்டு திருடர்கள் பகலில் ஒரு வீட்டில் திருட சென்றார்கள்!
அந்த வீட்டில் இருந்த பெண்ணை கட்டி போட்டு விட்டு! வீட்டில் இருக்கும் பணம் நகை எல்லாம் எங்கே இருக்கு என்று கேட்டு மிரட்டி கொண்டு இருந்தார்கள்!
அப்போது பாத்ரூம்ல குளித்து கொண்டு இருந்த ஆண் வெளியே வந்து திருடர்களை பார்த்து பயந்து!
எப்பா! வீட்டில் இருக்கும் எல்லா நகை, பணத்தையும் கொடுத்து விடுகிறேன்! முதல்ல கட்டி போட்டு இருக்கும் பெண்ணை அவிழ்த்து விடுங்கள் என்று கெஞ்சினான்!
அதில் ஒரு திருடன்! என்னப்பா உன் பெண்டாட்டி மேல் அவ்வளவு பாசமா! என்று கேட்க !
அதற்கு அந்த ஆள் ! ஆமா சார் ரொம்ப பாசம் கூடவே என் உயிர் மேல் பயம்! கடைக்கு போய் இருக்கும் என் மனைவி எப்ப வேண்டும் என்றாலும் திரும்பி வந்துடுவாங்க அதான் அவர்களை முதலில் அவிழ்த்து விடுங்க ! அவங்க போகட்டும் என்றானாம்!
Comments
Post a Comment