மூக்கை அறுத்தது
அவள் அரசி மட்டுமன்று அழகியுங்கூட.
அவள் கணவன் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன். பெயர் கழற்சிங்கன்.
கணவனும் மனைவியும் சிவனை வழிபட ஊர் உராகச் சென்றனர். அன்று திருவாரூர் வந்திருந்தனர்.
0
கணவன் மூலவரை வழிபட விரைவாகச் சென்றுவிட்டான். மனைவி கோயிலைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு மெதுவாகச் சென்றாள்.
வழியில் ஒரு மண்டபம். அங்கே சிலர் இறைவனுக்கு மாலை கட்டிக்கொண்டிருந்தனர்.
பூக்களின் மணம் மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது.
0
பெண்களுக்குப் பூவைக் கண்டால் ஆசை. அவள் அங்கிருந்த பூ ஒன்றை எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் தலையில் அணிந்திருந்த முடி (கிரீடம்) அவளை அரசி என்று வெளிச்சம் போட்டுக் காட்டிற்று.
அவள் பூவை மோந்து பார்ப்பதை ஒருவன் கவனித்தான்.
ஓடோடி வந்தான்.
0
அவள் கூந்தலைப் பிடித்துக் கீழே தள்ளினான். தன் வாளை உருவினான். அவள் மூக்கை அறுத்து எறிந்தான்.
அறுத்தவன் செருத்துணையார். போரில் அரசனுக்குத் துணைநிற்பவன்.
அவள் கதறினாள்.
0
கணவனுக்குச் செய்தி போயிற்று.
அவன் அரசன் கழற்சிங்கன்.
வந்தான்.
மனைவியைப் பார்த்தான். அருகில் ரத்தக்கறை படிந்த வாளுடன் நிற்கும் செருத்துணையாரை வினவினான்.
செருத்துணையார் நிகழ்ந்ததைக் கூறினார்.
0
நீ இறைவனுக்கென்று இருந்த பூவை முகர்ந்த மூக்கை அறுத்தாய்.
இந்தத் தண்டனை இவளுக்குப் போதாது.
பூவை எடுத்த கையை வெட்டியிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே தன் வாளால் கையை வெட்டி வீழ்த்தினான்.
0
அந்தக் கால நீதியும் தண்டனையும் இப்படி இருந்தது.
Comments
Post a Comment