யானைக்கும் சிலம்பிக்கும் சண்டை


சிலம்பிப் பூச்சியை சிலந்திப் பூச்சி என்கின்றனர்.

யானை எவ்வளவு பெரியது, சிலம்பிப்பூச்சி எவ்வளவு சிறியது என்பது தெரிந்ததுதான். 

ஏன் சண்டை, எதற்காகச் சண்டை, வென்றது எது?

0

திருவானைகாவில் சிவன் கோயில் இருக்கிறது. 

ஆதியில் அது நாவல் மரத்தடியில் இருந்தது. 

அப்போது சிவனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்று சிலம்பிப் பூச்சி விரும்பிற்று.  கட்டிற்று. 

சிலம்பிப் பூச்சியின் வலையே அந்தக் கோயில். 

சிலம்பியின் பத்தி (பக்தி) இப்படி ஒரு கோயில் ஆயிற்று. 

அது சிலந்திக்கூடு கோயில். 

யானை ஒன்று அங்கு வந்தது. 

சிலந்திக் கூட்டைப் பார்த்தது. 

எச்சிலைத் துப்பி வலை பின்னுகிறதே. 

சிவனுக்கு அபத்தம் செய்கிறதே என்று சினம் கொண்டது. தன் துதிக்கையால் அந்த வலையைப் பிய்த்து எறிந்தது. 

நிம்மதியாகத் திரும்பிச் சென்றுவிட்டது. 

இது சிவன்மீது யானை காட்டிய அன்பு. 

சிலம்பி திரும்பவும் கூடு கட்டிற்று. 

மறுநாள் யானை வந்தது. 

முதல்நாள் செய்தது போலவே சிலம்பிக் கூட்டைப் பிய்த்து எறிந்துவிட்டுப் போய்விட்டது. 

இப்படிச் சில நாட்கள் சண்டை நடைபெற்றது. 

இது பக்திச் சண்டை. பக்தியில் போட்டி.  

எது சரி 

எண்ணிப் பாருங்கள்

எனக்குத் தெரியவில்லை. 

0

அன்று ஒருநாள் 

யானை சிலம்பிக் கூட்டைப் பிய்த்துக்கொண்டிருந்தது.

சிலந்திப் பூச்சி யானையின் தந்தத்தில் ஏறிக்கொண்டது. யானை உணர்வுக்குத் தெரியாமல் மெதுவாக நகர்ந்தது. துதிக்கையின் நுனியிலுள்ள துளைக்குள் புகுந்து நன்றாகக் கடித்துவிட்டது. 

சிலந்தி விஷமுள்ள பூச்சி. 

யானை இறந்துவிட்டது. 

0

சிவன் பார்த்தார்.  யானையின் பக்தியைப் பாராட்டினார். 

மக்கள் யானையை வணங்கினர். அந்த ஊரின் பெயரையே ஆனைக்கா என்றனர். அது இப்போது திருவானைக்கா என்று வழங்கப்படுகிறது. 

0

கோயில் என்று எண்ணிக்கொண்டு கூடு கட்டிய சிலம்பிப் பூச்சியை மன்னனாகப் பிறக்கச் செய்தார். அவன் உறையூர் மன்னன். சோழன் செங்கணான். 

அவன் திருவானைக்கா சிவனுக்குக் கல்லால் கோயில் கட்டினான். இன்னும் பல ஊர்களிலும் சிவனுக்குக் கற்கோயில்கள் கட்டினான். 

பார்க்க 


Comments

Popular posts from this blog

ஆறாமலேயே ஆறிவிட்டது

என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்

இந்த மாதிரி மக்களுக்கு