விட்டுக் கொடுக்க முடியுமா
வீட்டிலேயே தனிமை *பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!* *வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...* *இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...* *இங்குதான் என் மகள் படிப்பாள்...* *இங்குதான் விளையாடுவாள்...* *என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...* *என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....* *என்ன சமைப்பது?...* *என்ன சாப்பிடுவது?...* *அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..* *பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...* *தனிமை... வெறுமை...* *அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...* *பயணம் ஒரு கொடுமை...* *லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...* *சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...* *ஓலாவும், ஊபரும்...* நமக்கு தேவைப்படும் நேரத்தில், *பீக் hour சார்ஜ்* போட்டு களைப்படைய செய்கின்றனர்... *நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....* இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்...