Posts

Showing posts from November, 2023

பாவம் அவர்

டிரெயின் கிளம்பியது அவசரம் அவசரமாக ஒருவன் ஏறி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து சற்று மூச்சி வாங்கினான். சற்று நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் ( TTR) வந்து டிக்கெட்டை கேட்டார்! அவன் வாங்கி வைத்திருந்த டிக்கெட்டை கொடுத்தான்! TTR பயணியை பார்த்து ஐயா இது பாசஞ்சர் ரயில் டிக்கெட் என்று சொல்ல! அவரோ நான் பாசஞ்சர் தானே! என்று சொல்ல! அதற்கு அவர் இல்லங்க ஐயா ! இது எக்ஸ்பிரஸ் டிரெயின்! நீங்கள் பாசெஞ்சர் ரயில் டிக்கெட் வாங்கி இருப்பதால் இதில் நீங்கள் பயணிக்க முடியாது என்று சொல்ல! அதற்கு அவர் சரி பாசெஞ்சர் ரயிலுக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்க! பாசஞ்சர் ரயில் மெதுவாக செல்லும் எல்லா ஊரிலும் நின்று செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக செல்லும் குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் தான் நிக்கும்! அதனால் நீங்கள் அடுத்த ஊரில் ரயில் நிக்கும்போது நீங்கள் அங்கே இறங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல! அதற்கு பயணி TTR ஐ பார்த்து ஒன்னு பண்ணுங்க நான் டிக்கெட் எடுத்து விட்டேன் நீங்க என்ன பண்ணுங்க ரயிலை மெதுவா போக சொல்லுங்க எனக்கு ஒன்னும் வேகமா ஊருக்கு போய் ஒன்னும் அங்க ஒன்னும் வேலை இல்லை! என்று சொல்ல! அதற்...

இளமையாக்கும் மாத்திரை

ஒரு விஞ்ஞானி ஒரு மாத்திரை கண்டு பிடித்தார். அதில் ஒரு மாத்திரையை சாப்பிட்டால் ஐந்து வயது குறையும். விஞ்ஞானி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு 60 வயது பாட்டி அந்த மாத்திரை இருந்த பாட்டிலை விஞ்ஞானிக்கு தெரியாமல் எடுத்து போய் விட்டது. மறுநாள் விஞ்ஞானி தன் கண்டுபிடித்த மாத்திரையை காணவில்லை என்று தேடி கொண்டு இருந்தார். சரி வேலை செய்யும் பாட்டி வந்தால் கேட்கலாம் என்று காத்து இருந்தார். அப்பொழுது 30 வயது மிக்க ஒரு அழகிய பெண் கையில் ஒரு குழந்தையுடன் வந்தார். விஞ்ஞானி அந்த பெண்ணை பார்த்து யாரம்மா நீ உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஐயா நான் தான் உங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பாட்டி, உங்களுக்கு தெரியாமல் நீங்கள் கண்டு பிடித்த மாத்திரை எடுத்து போய் அதில் 6 மாத்திரை சாப்பிட்டு விட்டேன் அதான் 30 வயது பெண்ணாகி விட்டேன். விஞ்ஞானி சொன்னார் சரிம்மா அது நல்ல விசயம் தானே அதற்கு ஏன் இவ்வளவு வருத்தபடுகிறாய். சார்! இந்த விசயத்தை என் 62 வயது வீட்டுக்காரருக்கு சொன்னேன். அவர் என்னை நம்பாமல் 12 மாத்திரை எடுத்து சாப்பிட்டு விட்டார். என் கையில் விரல் சூப்பி கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை அ...

நினைவுபடுத்துங்க

 மாலை அந்தி சாய்ந்த நேரம்! விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு அரசு பேருந்து புறப்பட்டது! ஒரு வயதான மூதாட்டி ஏறினார்! ஓட்டுநர் கிட்ட சென்று ஐயா மறக்காம கண்டமங்கலம் வந்தா சொல்லுங்க ! மறந்துடாதீங்க! கண்டிப்பா சொல்லுங்க என்று பாட்டி கெஞ்ச! ஓட்டுநர் ! கண்டிப்பா சொல்றேன் அம்மா! எதற்கும் என் கண் பார்வை படும் இடத்தில் உட்காரு என்று சொன்னார். பேருந்து புறப்பட்டது! ஓட்டுநர் நடத்துநரிடம் பேசி கொண்டே கண்டமங்கலம் தாண்டி இரண்டு கிலோமீட்டர் வந்துவிட்டார்! திடீர் என்று நடத்துநர் பாட்டியின் வேண்டுகோளை நினைவு படுத்த பதறி போய் உடனே பேருந்தை U டர்ன் எடுத்து கண்டமங்கலம் வந்து சேர்ந்து, நிம்மதியாக அந்த பாட்டியை பார்த்து அம்மா! கண்டமனூர் வந்து விட்டது என்று அவரை எழுப்ப! பாட்டி ஓட்டுனருக்கு நன்றியை தெரிவித்து சுருக்கு பையில் இருந்து மாத்திரை ஒன்றை எடுத்து போட்டு கொண்டார்! ஓட்டுநர் திகைத்து போய் என்ன அம்மா செய்கிறாய் என்று கேட்க! அதற்கு அந்த பாட்டி என் பேத்தி தான் சொல்லுச்சு ஆயா மறக்காம கண்டமங்கலம் வந்த வுடன் பிளட் பிரஸர் மாத்திரை போட்டு கொள் என்று சொல்லுச்சு! என்று சொன்னார்! இப்ப ஓட்டுனருக்கு பிரசர்...

களாப்பழம் பறிக்கும்பபோது

பச்சைமலையில் 32 ஊர்கள். அவற்றை வன்னாடு என்று கூறுவர்.  சங்க இலக்கியங்கள் நிலத்தை வன்னிலம் என்றும் மென்னிலம் என்றும் பாகுபடுத்துகின்றன.  உழுது பயிரிடும் நிலம் மென்னிலம்.  உழ முடியாமல் பாறை இடுக்குகளில் உள்ள மண்ணைக் கொத்திப் பயிரிடும் நிலம் வன்னிலம்.  வன்னிலங்களைக் கொண்ட நாடு வன்னாடு.  0 முருகன் நிலப்புறத்தில் பயிர்த்தொழில் செய்து வாழ்ந்துவந்தான்.  அந்த மலையில் வாழ்பவர்களை நிலப்புறத்தார் மலையாளத்தான், மலையாளச்சி என்று குறிப்பிடுவது வழக்கம்.  அந்தக் காலத்தில், எனக்குத் தெரிந்து 60 ஆண்டுளுக்கு முன்பு, மலையாளத்தான்  இடுப்பில் கோவணம் கட்டியிருப்பான். 4 முழ வேட்டியைத் தலையில் கட்டியிருப்பான்.  மலையாளச்சி இடுப்பில் சேலைத்துணி கட்டியிருப்பாள். அதைத் தவிர வேறு எந்தத் துணியையும் அவர்கள் மேலே போட்டுக்கொள்ள மாட்டாள். அவர்களின் நாட்டுக் கட்டுப்பாடு அது.  முலை முட்டும் பருவப் பெண்ணும் அப்படித்தான்.  0 முருகனுக்குக் கலப்பைக் கட்டை வேண்டும். கட்டை கொண்டுவந்தால்  தச்சன் கலப்பை செய்து தருவான்.  தச்சனுக்குக் கூலி தரப்படுவதில்லை.  தச்சனுக...