பாவம் அவர்
டிரெயின் கிளம்பியது அவசரம் அவசரமாக ஒருவன் ஏறி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து சற்று மூச்சி வாங்கினான்.
சற்று நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் ( TTR) வந்து டிக்கெட்டை கேட்டார்!
அவன் வாங்கி வைத்திருந்த டிக்கெட்டை கொடுத்தான்!
TTR பயணியை பார்த்து ஐயா இது பாசஞ்சர் ரயில் டிக்கெட் என்று சொல்ல!
அவரோ நான் பாசஞ்சர் தானே! என்று சொல்ல!
அதற்கு அவர் இல்லங்க ஐயா ! இது எக்ஸ்பிரஸ் டிரெயின்! நீங்கள் பாசெஞ்சர் ரயில் டிக்கெட் வாங்கி இருப்பதால் இதில் நீங்கள் பயணிக்க முடியாது என்று சொல்ல!
அதற்கு அவர் சரி பாசெஞ்சர் ரயிலுக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்க!
பாசஞ்சர் ரயில் மெதுவாக செல்லும் எல்லா ஊரிலும் நின்று செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக செல்லும் குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் தான் நிக்கும்!
அதனால் நீங்கள் அடுத்த ஊரில் ரயில் நிக்கும்போது நீங்கள் அங்கே இறங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல!
அதற்கு பயணி TTR ஐ பார்த்து ஒன்னு பண்ணுங்க நான் டிக்கெட் எடுத்து விட்டேன் நீங்க என்ன பண்ணுங்க ரயிலை மெதுவா போக சொல்லுங்க எனக்கு ஒன்னும் வேகமா ஊருக்கு போய் ஒன்னும் அங்க ஒன்னும் வேலை இல்லை! என்று சொல்ல!
அதற்கு TTR கவலை படாதீங்க அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்கி கொள்கிறேன் என்றார் பாவமாக!
Comments
Post a Comment