Posts

ஆறாமலேயே ஆறிவிட்டது

என் தலையைவிட உயரமானது என் கைத்தடி. அதனை ஊன்றிக்கொண்டு நடந்து சென்றுகொண்டிந்தேன். எனக்கு வேண்டிய அளவு என்னிடம் செல்வம் உள்ளது. பிறருக்கும் அவ்வப்போது உதவி செய்து வந்தேன்.  அன்று என் கையில் பணம் இல்லை. அது வெளியூர். என்னைத் தெரிந்தவர் அங்கு யாரும் இல்லை.  வயிறு கேட்குமா? பசித்தது.  ஒற்றையடிப் பாதை. அந்த வழியில் பலர் சென்றனர். சிலர் திரும்பிக்கொண்டிருந்தனர்.  சோறு, பூசனிக்காய்க் குளம்பு, பறங்கிக்காய்க் கூட்டு, ரசம் நன்றாக இருக்கிறது. மோரில்தான் கொஞ்சம் கூடுதலாகத் தண்ணிர் - என்று ஒருவர் வேறொருவரிடம் சொன்னதைக் கேட்டேன்.  அது அன்னதானம் செய்யும் சத்திரமாம். ஏழை எளியவர்களுக்கு வயிறு நிறையச் சோறு போடுவார்களாம்.  அப்பாடா  பசி தீர்ந்துவிடும்  தெம்பு வந்துவிட்டது  ஏழெட்டு பேர் சென்றோம். அங்குத் தெரிந்த வாசல் வழியே நுழைந்தோம்.  வாயிலில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.  அந்தச் சத்திரத்தில் 20 பேர் வரையில்தான் உட்கார்ந்து சாப்பிட முடியும்.   உள்ளே சாப்பிடுபவர் வெளியில் வந்த பிறகுதான் வெளியில் இருப்பவர்களை உள்ளே அனுப்புவார்கள். இதனை ஒழுங்குப...

இந்த மாதிரி மக்களுக்கு

 9665737555 ஒரு போலிஸ் நண்பரின் பதிவு…‌ 💜 இரவு 10.15 மணிக்கு பணி முடித்து வீட்டிற்க்கு செல்லும்போது நல்ல மழை ...இராஐகுளம் அருகில் எனக்கு முன்னால் TVS 50 ல் சென்ற ஒரு பெண்மணியை ஓவர்டேக் செய்து சென்று விட்டேன். ஆனால் அவர்கள் பாவம் ...முழுமையாக மழையில் நனைந்து விட்டார்கள்..பின்பக்கம் உடை முழுவதுமாக காற்றில் பறக்கிறது..அவர் உடலை மூடவில்லை...சொல்லலாம் என யோசித்தேன்..அவங்க எப்படி எடுத்துக்குவாங்களோனு யோசிச்சு கடந்து வந்திட்டேன்.. 0 இராஜகுளம் கட்டிங்கல திரும்பி வந்துகொண்டிருக்கும்போது எனது வண்டியை பின்தொடர்ந்து ஒரு வண்டி வந்துகொண்டிருப்பதை எனது ரியர்வியூ மிரர் மூலமாக பார்த்தேன் . இது வழக்கமான ஒன்றுதான்.ஏனென்றால் கிட்டத்தட்ட 3.5 கிமீ ஆளரமில்லாத இரண்டு பக்கமும் ஏரிகளுக்கு நடுவில்தான் அந்த பாதையே இருக்கும். அதனால் பல பேர் தனியா வர பயந்து ஏதோ ஒரு வண்டி வந்தா அதுகூடவே வருவாங்க.எனக்கு இது பலமுறை அனுபவம்... அந்த ரோடில் எப்பவும் டிராபிக் இல்லாததால நான் வண்டியை வேகமாக ஓட்டுவேன்..நடுவில ஒரு பள்ளம் இருக்கும்..வழக்கம்போல அங்க பிரேக் அடிக்கும்போது சார்..சார் என ஒரு பெண் குரல் .....திரும்பி பார்த்தா ஏ...

என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்

அனபாயன் சோழன் ஆட்சிக் காலம்.  காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு உழவன். சிவனடியார் அவனிடம் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான்.  0 சிவன் தன் அடியவர்களைச் சோதனை செய்வது வழக்கம். சிவனடியார் கோலத்தில் இந்த உழவர் இல்லத்துக்கு வந்தார். 0 "எதைக் கேட்டாலும் கொடுக்கிறீர் என்று அறிந்து என் ஆசையைத் தீர்த்துக்கொள்ள உன்னிடம் வந்தேன்"  "கேளுங்கள் சாமி" "என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்" "என்னிடம் இருப்பதைக் கேட்டீர்கள். தருகிறேன் சாமி"  0 உழவர் தன் மனைவியை அழைத்தார். அவள் கணவன் சொல்லைத் தட்டாதவன்.  "இன்று உன்னை இவருக்குக் கொடுத்துவிட்டடேன்" மனைவி வியந்தாள். தயங்கினாள். கணவனை வணங்கினாள். பின் அடியாரை வணங்கினாள்.  "இந்த ஊரைத் தாண்டி நாங்கள் செல்லும் வரையில் எங்களுக்குத் துணையாக நீ வரவேண்டும்" "ஆகட்டும் சாமி"  0 உழவர் அவர்களுக்குப் பாதுகாப்பாக அவர்களின் பின்னே சென்றார்.  செய்தி உற்றார் உறவினர்களுக்கும் ஊருக்கும் தெரிந்துவிட்டது.  அனைவரும் திரண்டு வந்தனர். உழவருக்கு அறிவுரை கூறித் தடுத்தனர். உழவர் கேட்கவில்லை. உழவனை அடித்தனர். பொறுத்துக்கொண்டா...

என்னைத் தொடாதே

என்னைத் தொடாதே என்று என் மனைவி கூறுகிறாள்.   இனிமேல் சிவனே என்று இருந்துவிடுகிறேன்.  சிதம்பரத்தில் வாழ்ந்த அந்தக் குயவன் இப்படித் தீர்மானித்தான். ஏன் அவள் இப்படிச் சொன்னாள் நான் இன்னொருத்தியோடு இருந்தது தப்புதான். இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன் என்று கெஞ்சுகிறேன். அவள் கேட்கவில்லை. சரி போகட்டும், ஆறப்போட்டால் எல்லாம் சரியாய்விடும் என்று எண்ணினேன். "திருநீலகண்டம்" என்று அவள் சாமி பெயரைச் சொல்லி சத்தியம் செய்து தொடக்கூடாது என்று சொல்லிவிட்டாளே.   குயவன் தன்னை நொந்துகொண்டான்.  0 மனைவி கணவனைத் தொடாமல் கணவனுக்கு வேண்டிய பணிவிடை அனைத்தையும் செய்துவந்தார். தங்களுக்குள் உடல் உறவு இல்லாமை அயலாருக்குத் தெரியாவண்ணம் இருவரும் வாழ்ந்துவந்தனர். இளமையிலிருந்தே இப்படி வாழ்ந்தவர்கள் முதுமையும் அடைந்தனர். என்றாலும் சிவன்பால் கொண்ட அன்பு குறையாமல் வாழ்ந்துவந்தனர். 0 இருவரும் சிவனிடம் கொண்டிருந்த அன்பினை விளக்கும் வகையில், சிவன் யோகி வடிவம் தாங்கி அவர்களிடம் வந்தார். கோவணம் கட்டிக்கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு பூணூல் அணிந்துகொண்டு வந்தார். சிவன் தன் செஞ்சடையை மறைத்துப் பம்பைத்...

பொண்டாட்டி மேல் அவ்வளவு பாசமா

 இரண்டு திருடர்கள் பகலில் ஒரு வீட்டில் திருட சென்றார்கள்! அந்த வீட்டில் இருந்த பெண்ணை கட்டி போட்டு விட்டு! வீட்டில் இருக்கும் பணம் நகை எல்லாம் எங்கே இருக்கு என்று கேட்டு மிரட்டி கொண்டு இருந்தார்கள்! அப்போது பாத்ரூம்ல குளித்து கொண்டு இருந்த ஆண் வெளியே வந்து திருடர்களை பார்த்து பயந்து! எப்பா! வீட்டில் இருக்கும் எல்லா நகை, பணத்தையும் கொடுத்து விடுகிறேன்! முதல்ல கட்டி போட்டு இருக்கும் பெண்ணை அவிழ்த்து விடுங்கள் என்று கெஞ்சினான்! அதில் ஒரு திருடன்! என்னப்பா உன் பெண்டாட்டி மேல் அவ்வளவு பாசமா! என்று கேட்க ! அதற்கு அந்த ஆள் ! ஆமா சார் ரொம்ப பாசம் கூடவே என் உயிர் மேல் பயம்! கடைக்கு போய் இருக்கும் என் மனைவி எப்ப வேண்டும் என்றாலும் திரும்பி வந்துடுவாங்க அதான் அவர்களை முதலில் அவிழ்த்து விடுங்க ! அவங்க போகட்டும் என்றானாம்!

காரில் போனார்கள்

ஒரு காரில், தாய், மனைவியுடன், ஒருவன் பயணம் செய்து கொண்டு இருந்தான். பின்னாடியே ஒரு போலீஸ் ஜீப் அந்த காரை பின் தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில், போலீஸ் ஜீப், காரை முந்தி மறிப்பது போல் நின்றது. அதில் இருந்து இறங்கிய, போக்குவரத்து துறை உயர் அதிகாரி, காரில் இருந்து, அந்த மனிதனை இறங்குமாறு பணித்தார். அவனும் இறங்கி வரவே, வாழ்த்துக்கள் sir! நானும் உங்கள் வண்டியை, விடாமல் அரை மணி நேரமாக ஃபாலோ செய்கிறேன். நிதானமாக, போக்கு வரத்து விதிகளை மீறாமல், கவனமாக வண்டி ஓ ட்டினீர்கள்! அதை பாராட்டி, உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் க்கான செக் ! என்று எடுத்து நீட்டினார் காரை ஒட்டியவர் குஷியாகி, சொந்த கார் வாங்க வேண்டும்! என்ற என் கனவு நினைவாக போகிறது என்றான். உடனே அவன் மனைவி, அது மப்புல கண்டபடி உளறும் ! நீங்க கண்டுக்காதீங்க என்றாள். காது கேட்காத அவன் தாய், அடுத்தவங்க வண்டிய திருடாதேன்னு அப்பவே சொன்னேன். கேட்டியா? இப்ப பாரு போலீஸ் கிட்ட மாட்டிகிட்ட ! என்றாள்.

இதுக்குதான் ஃபோன்

  அலுவலகத்தில் இருக்கும் கணவனுக்கு மெஸேஜ் அனுப்பினார் அவர் மனைவி மனைவி : என்னங்க , வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வாங்க, அப்படியே சுகன்யா உங்களுக்கு ஹாய் சொல்ல சொல்றா... ( இது மனைவியின் மெசேஜ்) கணவன் : யாரு சுகன்யா , எனக்கு ஹாய் சொல்ல சொல்றது.. மனைவி : அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீங்க மெஸேஜ் படிச்சிட்டீங்களான்னு கன்பார்ம் பண்றதுக்காகத்தான் அப்படி நான் போட்டு அனுப்பிச்சேன்... இதுக்கு மேல தான் ட்விஸ்ட்டே... கணவன் : இல்ல, நான் இங்க சுகன்யா கூடத்தான் இருக்கேன் , நீ எந்த சுகன்யாவை சொல்றேன்னு தெரியல , அதான் கேட்டேன்... மனைவி : இப்போ நீங்க எங்க இருக்கீங்க??? கணவன் : காய் கறி கடையில... மனைவி : அங்கேயே இருங்க 10 நிமிஷத்துல வர்றேன்... கணவன் : சரி சீக்கிரம் வா... 10 நிமிஷத்துல வர்றேன்னு சொன்ன மனைவி 5 நிமிஷத்துல காய்கறி கடைகிட்ட வந்து திரும்பி கணவனுக்கு கால் பண்றாங்க... மனைவி : எங்க இருக்கீங்க?? கணவன் : நீ எங்க இருக்க?? மனைவி : காய்கறி கடையில... நீங்களும் அவளும் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க மொதல்ல... கணவன் : நான் இன்னமும் ஆபீஸ் ல தான் இருக்கேன் செல்லம்.. நீதான் காய்கறி கடைக்கு ...